ராமநாதபுரத்தில் கேத் லேப் மிஷின் திறப்பு விழா.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் நட்ராஜ் ஹாஸ்பிடலில் முதன்முறையாக இதய ஆஞ்சியோ கிராபி ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தக்கூடிய அதிநவீன கேத் லேப் மிஷின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் என். எம். மயில்வாகனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கேத்தலிஷேசன் லேப் ரேட்டரியை திறந்து வைத்தார். ராமநாதபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் டி.அரவிந்தராஜ், ராமநாதபுரம் ராஜன்ஸ் மருத்துவமனை மருத்துவர் கே. ஜோசப் ராஜன், இந்திய மருத்துவ சங்கமாநில குழு உறுப்பினர் மருத்துவர் கே. சின்னதுரை அப்துல்லா,இந்திய மருத்துவ சங்க ராமநாதபுரம் கௌரவ செயலாளர் மருத்துவர் R.பரணி குமார் இந்திய மருத்துவ சங்கம் நிதிக்குழு செயலாளர் மருத்துவர் சி.ராசிகா மற்றும் அ.இ.அதிமுக ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினரும் ஒன்றியச்செயலாளருமான R.G. மருதுபாண்டியன், |தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் நாகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள். கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இருதயம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை டாக்டர்.என்.ஜோதி முருகன் நடராஜன் அனைவரையும் வரவேற்றார். ராமநாதபுரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ராமமூர்த்தி நன்றியுரை கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி