RTE கல்வி கட்டணம் குறைப்பு : தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் கண்டனம்....
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம் 2009 இன் படி 25 சதவீதம் மாணவர்களை தனியார் பள்ளிகளில் ஒன்பது லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் சேர்க்கப் பட்டனர்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்களின் பிள்ளைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசு அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கை செய்யப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக ஒன்பது லட்சம் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள் ..
இப் பிள்ளைகளுக்கு மத்திய அரசு தரும் கல்வி கட்டணத்தை மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்குகிறது.
அரசு ஒரு மாணவனுக்கு ரூபாய் 40000 ஆயிரத்திற்கு மேல் செலவழிக்கிறது..
ஆனால் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் கல்வி கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் குறைத்தே வழங்குகிறது.
இந்தியாவிலேயே மிகக் குறைந்த கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் மாநிலமாக தமிழக அரசு உள்ளது.
டெல்லியில் கூட 28,500 எல்கேஜி மாணவனுக்கு நிர்ணயித்து வழங்கப்படுகிறது.. ஆனால் தமிழகத்தில் சென்ற ஆண்டைக் காட்டிலும் கல்வி கட்டணம் 550 ரூபாய் வரை இந்த ஆண்டு குறைத்து கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர்.
அதுவும் இந்த கட்டணம் கொடுக்க மாட்டார்கள். கொடுப்பதற்கே பலமுறை ஆய்வுகள் பலமுறை கொடுத்த விண்ணப்பங்களையே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்
இதுவரை ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தான் கல்வி கட்டணத்தை பெற்று இருக்கிறோம். அரசு நிர்ணயித்த கட்டண த்தையே கொடுக்காமல் சென்ற ஆண்டு 75% கட்டணத்தை மட்டுமே கொடுத்தார்கள்.
அதுவும் பல பள்ளிகளுக்கு இன்னும் கொடுக்கவில்லை. நிர்ணயி த்துள்ள இந்த கட்டணத்திலும் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்து ள்ள கட்டணம் இந்த மூன்றில் எது குறைவோ அதைத்தான் வழங்குவார்கள்.
எனவே தமிழக அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் தனியார் பள்ளிகளால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். அனைத்தும் விலை உயர்ந்துள்ள நிலையில் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் கல்வி கட்டணத்தை மிக குறைத்து வழங்குவது எந்த வகையில் நியாயம்? தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு தமிழக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நியாயமான கல்வி கட்டண த்தை நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும்சி பிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வேண்டுகிறோம் என்று மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.