யானை மிதித்து உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க வேண்டும். தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வலியுறுத்தல்

 யானை மிதித்து உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க வேண்டும்.  தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வலியுறுத்தல்


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை மிதித்தும் அழித்தும் வருகின்றன.

இந்நிலையில் நேற்று மரகட்டா கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்கிற விவசாயி தன்னுடைய ஆடு மாடுகளை வனப்பகுதியை ஒட்டியுள்ள தன்னுடைய விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருக்கும் போது யானை தாக்கி உயிரிழந்தார்.

தகவலறிந்த தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் உடனடியாக மாவட்ட வன அலுவலரை தொடர்பு கொண்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பிடு தொகை ரூ. 5 இலட்சம் உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் எனவும் முதல் தவணையாக ரூ. 50000 பெற்றுகொடுத்து மேலும் நொகனூர் காப்பு காட்டில் முகாமிட்டிருக்கும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Thally Reporter. B. S. Prakash