பிஜேபி அரசு கொண்டுவரும் திட்டங்களை காங்கிரஸ் திமுக உரிமை கொண்டாடக்கூடாது

பிஜேபி அரசு கொண்டுவரும் திட்டங்களை காங்கிரஸ் திமுக உரிமை கொண்டாடக்கூடாது

பிஜேபி அரசு கொண்டுவரும் திட்டங்களை காங்கிரஸ் திமுக உரிமை கொண்டாடக்கூடாது. ஓசூரில் மாநில பிஜேபி செய்தி தொடர்பாளர் நரசிம்மன் பேட்டி.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேற்கு மாவட்ட பிஜேபி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி நரசிம்மன் தெரிவிக்கையில்,

பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை வழியாக ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் ஏற்கனவே1996ம் ஆண்டிலே பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்டு திட்டமிடப்பட்டது. பின்னர் அமைந்த காங்கிரஸ் திமுக கூட்டணி அரசால் அந்தத் திட்டம் செயல்படுத்த முடியாமல் இருந்த நிலையில் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முழு மூச்சாக நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்பொழுது பெங்களூர் ஓசூர் கிருஷ்ணகிரி வரை ரயில்வே பாதை அமைப்பதற்கு சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய சுமார் 2.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ஏதோ காங்கிரஸ் முயற்சியால் இது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோரி விளம்பரம் தேடிக் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் திட்டங்களின் புகழை காங்கிரஸ் மற்றும் திமுகவினர் திருட நினைப்பது தவறான ஒன்றாகும். எனவே 2024 ஆம் ஆண்டிற்குள் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு 2026 ஆம் ஆண்டிற்குள் அந்த பாதையில் ரயில் ஓட்டமே நடத்தப்படும் என உறுதியாக தெரிவித்தார். மேலும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் சுமார் 2000 கோடி இந்தத் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் ஓசூரில் தனியார் பங்களிப்புடன் பயணிகள் பயன்பாட்டிற்காக விமான சேவை மத்திய அரசின் உடான் திட்டத்தின் வாயிலாக துவங்கப்படும்.

B. S. Prakash

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்