ஒசூர் மாநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற ஜேசிபியுடன் வந்த மாநகர அதிகாரிகள்....
ஒசூர் மாநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற ஜேசிபியுடன் வந்த மாநகர அதிகாரிகள்: முறையாக தெரிவிக்காமல் கடைகளை அகற்றக்கூடாது என வியாபாரிகள் வாக்குவாதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியின் 12வது வார்டிற்குட்பட்ட பாகலூர் வீட்டுவசதி வாரிய பகுதியில் சாலையோரமாக ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன..
இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனத்துடன் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வந்ததால் வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
ஏராளமானோர் குவிய தொடங்கியதால் போலிசார் குவிக்கப்பட்டனர்..
வியாபாரிகள் கூறுகையில்:
முறையான அறிவிப்போ, கல ஆவகாசமோ வழங்கப்படாத நிலையில் எப்படி கடைகளை அகற்றிக்கொள்ள முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. அதிமுக மாமன்ற உறுப்பினரும், நிர்வாக குழு தலைவருமான அசோகா அவர்கள் தலைமையில் அதிமுகவினர் வியாபாரிகளுக்கு ஆதரவாக களமிறங்கியதால்
மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் அவர்கள், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றிக்கொள்ள 5 நாட்கள் காலஅவகாசம் வழங்கினர்
வியாபாரி சென்னகிருஷ்ணன் அளித்த பேட்டியில்:
மாநகரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புக்கள் உள்ளபோதும் போக்குவரத்து நெரிசல் இல்லாத இங்கு மட்டும் ஆக்கிரமிப்புக்கள் அகற்ற வேண்டிய நோக்கம் என்ன?
மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புக்களை அகற்ற தயாரா என கேள்வி எழுப்பினார்..
ஆக்கிரமிப்பு பணிகள் அகற்றிக்கொள்ளாவிட்டால் மாநாட்சி நிர்வாகம் அகற்றுவோம் என தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது..
அப்போது அதிமுக பகுதி செயலாளர்கள் மஞ்சுநாத்,ராஜீ, மாமன்ற உறுப்பினர்கள் லஷ்மி ஹேமக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
ஓசூர் செய்தியாளர்: E. V. பழனியப்பன்