சாலை வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்...........
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் ஆதி திராவிடர் காலனி யில் சுமார் 45 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு சென்று வர நிரந்தரமாக ஒரு பாதை இருந்தது. இந்த இடங்களில் சிலர் வீடுகளை கட்டி உள்ளனர். இதனால் ஆதி திராவிடர்கள் செல்ல பாதை இல்லாமல் போய்விட்டது. மேலும் சுமார் 40 ஆண்டு காலமாக இரு பகுதிகளில் பாதை அமைத்து சென்றுகொண்டிருந்தனர்.
இந்த பாதையை தற்பொழுது சிலர் வழி மறித்து இந்த வழியில் வரக்கூடாது என வேலி அமைத்தும், ஒருபுறம் இரு சக்கர வாகங்கள் தவிர மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் செல்லக்கூடாது என்று இரு புறம் உள்ள பாதைகளை அடைத்துவிட்டானர். இதனால் அந்த பகுதி ஆதி திராவிட மக்கள் ஆசுப்பத்திரி, அவசர தேவைகளுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டபட்டுக்கொண்டுள்ளனர்,
இந்த பகுதிக்கு பாதை வேண்டி தகுந்த அதிகாரிகளிடம் கடந்த 3 ஆண்டு காலமாக முறையிட்டும் பிரயோஜனம் இல்லை. இதனால் இன்று அந்த கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குமார் என்பவரின் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் பாதை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததான் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
B. S. Prakash. Thally Reporter