கர்நாடகாவில் அரசு பேருந்தை மறித்த காட்டு யானை

 கர்நாடகாவில் அரசு பேருந்தை  மறித்த காட்டு யானை...


தேன்கனிக்கோட்டை, செப். 17-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவயகிரி அருகே உள்ள சென்னமாளம் பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கர்நாடக அரசு பேருந்து  கணக்கபுராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. கர்நாடக மாநில எல்லையில் உள்ள காடுசிவன ஹள்ளி  பகுதியில் சென்றபோது ஒற்றை காட்டு  யானை சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.

காட்டு யானை கண்டு பேருந்து ஓட்டுனர் பேருந்து நிறுத்தினார்.  அப்போது அந்த காட்டு யானை பேருந்து நோக்கி வந்து பேருந்தை வழிமறித்து சாலையில் நின்றது.  சுமார் அரை மணி நேரம் ஆகியும் யானை வழிவிடாமல் சாலையில் நின்றது.

இதையடுத்து  ஓட்டுனர் பேருந்தில் அதிக ஒலி எழுப்பியும் பயணிகள் அதிகம் கூச்சலிட்டவாறு யானையை நோக்கி பேருந்து சென்றது. அப்போது யானை பின்னோக்கி சென்று அதே வேகத்தில் திரும்பி மீண்டும் பேருந்தை நோக்கி வந்தது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகளும் குழந்தைகள் அலறியடித்தனர். ஆனால் பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து ஒலி எழுப்பியதால் 

நீண்ட நேரத்திற்கு பிறகு யானை சாலையில் இருந்து சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

B. S. Prakash. Thally Reporter