இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை இல் அறிஞர் அண்ணா வின் 144 வது பிறந்த நாள் விழா, அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது,
இவ்விழாவிற்கு முன்னாள் அமைச்சர் திரு பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் திரு பாலகிருஷ்ண ரெட்டி பேசியதாவது:
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்க அறிஞர் அண்ணா தான் சாட்சி,காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பியவர் அண்ணா, அண்ணா வின் கனவை நனவாக்கிய பெருமை புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களை சேரும்,கிராமங்கள் தோறும் ரோடு,பேருந்து,மின்சாரம்,தண்ணீர் வசதி என அனைத்தும் வர காரணமாக இருந்தவர் எம் ஜி ஆர் ,பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகம்,பை,சீருடை,ஆகியவற்றை கொடுத்து அவர்கள் கல்லூரி செல்ல காரணமாக இருந்தவர் அம்மா ஜெயலலிதா அவர்கள் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோர் வழியில் இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
விழாவில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட அதிமுக தொண்டர்களும் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தினேஷ்குமார் செய்தியாளர் 9944375506