17 படங்களில் 2000 கோடி வருவாயை ஈட்டிய உதயநிதி ....!
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் எல்லா படங்களையும் கைப்பற்றி வருகிறது. அதுவும் டாப் நடிகர்களின் படங்கள் உதயநிதி கைவசம் தான் செல்கிறது. அதுவும் பீஸ்ட், விக்ரம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வாங்கி இருந்தது.மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸின் கணக்கு வழக்கு எல்லாமே பக்காவாக இருக்கிறதாம். அதுவும் உடனுக்குடன் பணத்தை செட்டில் செய்து விடுகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இடம் தான் படத்தை கொடுக்க முன் வருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் தானாக முன்வந்து படத்தை கொடுக்கிறார்கள் என்று சொல்வதைவிட நிறுத்தி வாங்கப்படுகிறது என்பதுதான் உண்மை. உதயநிதி கேட்கின்ற விலைக்கு படம் கொடுக்கவில்லை என்று சொன்னால் தமிழகத்தில் எந்த தியேட்டரிலும் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலையில் பல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இதுவரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் 17 படங்களை வெளியிட்டு அதன் மூலம் 2000 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. தற்போது அவர்களது அடுத்த டார்கெட் பான் இந்தியா மூவி தான். அதாவது கன்னடத்தில் அனைத்து படத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்நிறுவனம் முயற்சி செய்துள்ளது.
அதுமட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு போட்டியாக மதுரை அன்புச்செல்வியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. ரெட் ஜெயண்ட் வருவதற்கு முன்பு அன்புச்செழியன் தான் பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டு வந்தார்.
ஒரு தனிநபர் ஆளுமையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார் அன்புச் செழியன். தற்போது அந்த இடத்தை ஆட்சி அதிகாரத்தை வைத்து உதயநிதி பிடித்துள்ளார். ஆனால் தற்போது வரை அன்புச் செழியன் மற்றும் உதயநிதி இருவரும் நட்பாக தான் பழகி வருகிறார்கள் என்று சொன்னாலும் இருவருக்குள்ளும் தொழில் போட்டி பகைமை இருக்கத்தான் செய்கிறது.
தமிழ் சினிமாவின் 90 சதவீத பணப்புழக்கம் உதயநிதி ஸ்டாலின் மூலமே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் சினிமா மட்டும் போதாது என்று மற்ற மொழிகளிலும் கல்லா கட்ட பல திட்டங்கள் தீட்டி வருகிறார். இதன்மூலம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தென்னிந்திய திரைப்படத்துறையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட உள்ளது.