சுரங்கபாதை சாலையில் மாட்டிகொண்ட சலவை கற்களை ஏற்றி வந்த லாரி
*ஓசூர் அருகே இரயில்வே சுரங்கபாதை சாலையில் மாட்டிகொண்ட சலவை கற்களை ஏற்றி வந்த லாரி சுமார் 3 மணி நேரமாக போக்குவரத்து தடை: வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும்அவதி*
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்களம் அருகே போடிச்சிப்பள்ளியில் உள்ள இரயில்வே சுறங்க பாதை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக உள்ளது அவ்வழியாக வரும் வாகனங்கள் அவ்வப்போது குழிக்குள் சிக்கித் தவித்து அதன் பிறகு மற்றவர்கள் உதவியுடன் வாகனத்தை மீட்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
இன்று மதியம் சுறங்கபாதை வழியாக சலவை கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று அவ்வழியில் வந்ததை அடுத்து குண்டும் குழியுமாக உள்ள சேற்றுக்குள் மாட்டிக் கொண்டது, அதன் பின்பு அவ்வழியாக வந்த அரசு பேருந்து மேலும் அதன் பின் ஒன்றன்பின் ஒன்றாக வந்த மற்ற வாகனங்களும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்ல முடியாமல் சுரங்க பாதையில் சிக்கி தவித்த நிலையில் மேலும் சுறங்க பாதை வழிதடத்தில் வந்த மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டு அணிவகுத்து நின்றன
தற்போது சலவை கற்களை ஏற்றி வந்த லாரியினை மற்ற வாகனத்தின் உதவியுடன் மீட்டெடுக்க போராடி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் எந்த வாகனமும் செல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலும் பணிக்கு சென்று வீட்டிற்க்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் தற்போது மாற்று பாதைக்கு நடந்து சென்று அதன் பிறகு மற்றொரு பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் குண்டும் குழியுமாக உள்ள சுரங்கப்பாதையின் சாலையினை விரைவில் சரி செய்தும் மேலும் அவசர காலத்துக்கு அதன் அருகாமையில் மாற்று வழி பாதை ஒன்றினை புதிதாக ஏற்பாடு செய்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
B. S. Prakash