போலி சுயமரியாதையை கடைபிடிக்கும் திமுக...! ஆதரவு அமைப்புகள் கடும் கண்டனம்...?!
தி.மு.க.வின் ஆதரவு அமைப்பான ஜாக்டோ-ஜியோ ஊடகங்களில் பரப்பி வருகின்ற ஒரு செய்தி அக்கட்சியின் தலைமையை ஆட்டம் காணச் செய்துள்ளது.
அதாவது அவர்களின் கூற்றுப்படி நமக்கு வந்தால் ரத்தம் அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல் முன்னுக்கு முரணாக அவர்கள் செய்து வரும் கேவலமான பணியை எடுத்துக் காட்டியுள்ளது.
கடந்த ஆட்சியில் இவர்கள் எதையெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்களோ அதை எல்லாம் இப்போது வேண்டும் என்று, வேண்டுமென்றேசெய்து கொண்டிருக்கிறார்கள்.
3 & 5-ஆம் வகுப்புகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பொதுத்தேர்வு வைத்தால், அது அடிமை அதிமுக!
4 & 5-ஆம் வகுப்புகளுக்கு பருவம் தோறும் பொதுத்தேர்வு வைத்தால், அது சமூகநீதி திமுக!
புதிய கல்விக் கொள்கையை நேரடியாக நடைமுறைப்படுத்தினால், அது அடிமை அதிமுக!
புதிய கல்விக் கொள்கையின் சரத்துகளுக்கு புதுப்புது பெயர்வைத்து நடைமுறைப்படுத்தினால், அது சமூகநீதி திமுக!
ஆணையர் பணியிடம் தோற்றுவித்தால், அது அடிமை அதிமுக!
ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஆணையரிடம் குவித்தால், அது சமூகநீதி திமுக!
Incentive-ஐ நிறுத்தி வைத்தால், அது அடிமை அதிமுக!
Incentive இனி தரவே முடியாது என்றால், அது சமூகநீதி திமுக!
EL Surrender-ஐ ஒரு வருடம் நிறுத்தி வைத்தால், அது அடிமை அதிமுக!
EL Surrender-ஐ மறுதேதி குறிப்பிடாது நிறுத்தி வைத்தால், அது சமூகநீதி திமுக!
புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு கைவிட வேண்டும் என்றால், அது அதிமுக ஆட்சி!
புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றால், அது திமுக ஆட்சி!
புதிய கல்விக் கொள்கையை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினால், அது எதிர்க்கட்சி திமுக.
புதிய கல்விக் கொள்கையில் நல்ல விசயங்கள் உள்ளன. அதை நடைமுறைப்படுத்துவோம் என்று அமைச்சர்களே கூறினால், அது ஆளுங்கட்சி திமுக.
அண்ணா வழங்கியது போல Incentive வழங்கப்படும் என்றால், எதிர்க்கட்சி திமுக.
ஒன்றிய அரசைப் பின்பற்றி Incentive-ஐ இரத்து செய்கிறோம் என்றால், அது ஆளுங்கட்சி திமுக.
DA நிறுத்தி வைப்பிற்கு கண்டனம் எழுந்தால், அது அதிமுக ஆட்சி!
30 மாதங்களுக்கான DA முழுமையாகப் பறிக்கப்பட்ட பிறகும் கண்டும் காணாது நகர்ந்தால், அது திமுக ஆட்சி!
மொத்தத்துல. . .
BJP சொல்ற ஊருக்கு நேரா ரோடு போட்டா, அது அடிமை அதிமுக!
சுத்தி வளச்சு ரோடு போட்டு BJP-யை திட்டிக்கிட்டே அம்புட்டுப் பேரையும் அவிங்க ஊருக்குக் கூட்டிக்கொண்டு போனால், அது சமூகநீதி திமுக!
அதிமுக காரன் காலில் விழுந்தால் அவன் டயர் நக்கி.. அதையே திமுக காரன் செய்தால் மாலை மரியாதை பதவிகள் கொடுத்து வரவேற்பு....
அரசு விழாவில் செங்கல் வைத்து சாமி கும்பிட்டா.... எட்டி உதைப்பது. திராவிட கலாச்சாரத்தின் படி கதவை சாத்திக்கொண்டு சாமி கும்பிட்டால் வாயை பொத்திக் கொண்டு அமைதியாக இருப்பது..!
மக்கள் கூடும் மேடைகளில் மட்டும் வீர முழக்கம் விடுவது... வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல தமிழ்நாட்டின் உரிமைகளை கேட்பதற்காக தான் டெல்லி செல்கின்றேன் என்று வீர வசனம் பேசுவது....!
ஆனால் அங்கே சென்று எல்லாவற்றிற்கும் தலையாட்டிவிட்டு ரோபோட்டிக் பொம்மை போன்று இயந்திரத்தனமாக இருந்து விட்டு வருவது தான் திராவிட கலாச்சாரம் சுயமரியாதை....!!!
அடடே
எத்தனை ஆச்சரியக் குறிகள்...!!!!
அத்தனைக்கும் சொந்தக்காரர்கள் நம் திராவிட மாடல் சித்தாந்தத்தை கொண்டவர்கள் ஆயிற்றே...
என்ன ஒரு அற்புதமான ஆட்சி.,..!
என்று அவர்களின் ஆதரவு அமைப்புகளே வெளியிட்டுள்ள செய்தி ஆச்சரியத்திலும் ஆச்சர்யம் தான்!!!