ராமநாதபுரம் எம்.எல்.ஏ. விற்கு மாவட்ட செயலாளர் பதவி : தொண்டர்கள் வரவேற்பு..!!
ராமநாதபுரத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு நேற்று முன்தினம் திமுக தலைமை மாவட்ட செயலாளர் பொறுப்பு அறிவித்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட முழுவதும் கட்சி தொண்டர்கள் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் நேற்று இரவு திமுக மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவும் ஆன காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தொண்டர்கள் படை சூழ ராமநாதபுரம் வந்தார். அவர் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அண்ணா சிலைக்கு தாரை தப்பட்டை முழங்க ஏராளமான தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரோடு, கட்சியினுடைய அவை தலைவர் சத்தியமூர்த்தி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகர் கழக செயலாளர்கள் கார்மேகம், பிரவீன் தங்கம் மேலும் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியினுடைய ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
அதற்கு முன்பு மிகப்பெரிய அலங்கரிக்கப்பட்ட இரு குதிரைகள் பொருத்தப்பட்ட சாரட் வண்டியை கட்சித் தொண்டர்கள் கொண்டு சென்று ஏற்ற முயன்ற போது அவர் வர மறுத்துவிட்டு நடந்தே வந்து மாலை அணிவித்து குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் : அன்வர் அலி