மூளை சாவு அடைந்த ரயில்வே தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்...!
*ஓசூர் காவிரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த ரயில்வே தொழிலாளி உடல் உறுப்புகள் தானம் செய்து சாதனை.*
ஒசூர், காவேரி மருத்துவமனையிலிருந்து இரயில்வே ஊழியரின் உடல் உறுப்புக்கள் சென்னைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே ஊழியராக பணியாற்றிய பிரபாகரன் கடந்த 20ம்தேதி இரவு தானாக கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து ஒசூர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் காவேரி மருத்துவமனையிலிருந்து மூளைசாவு அடைந்த ஜோலார்ப்பேட்டை சேர்ந்த பிரபாகரன்(31) இரயில்வே ஊழிய ரான இவர் தவறி விழுந்து ஒசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளைசாவு அடைந்தல இளைஞரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்ய பெற்றோர் அனுமதித்ததால்
காலை 10 மணி முதல் 10.45 மணி வரை நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் கண் விழிகள் பெங்களூரு நாராயன இருதாலயாவிற்கும் ,இதயம்,நுரையீரல் சென்னை MGM க்கும் சிறுநீரகங்கள் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதயம்,நுரையீரலுடன் ஆம்புலன்ஸ் வாகனம் ஒசூரிலிருந்து 11.30 மணிக்கு புறப்பட்ட நிலையில் 3 மணியளவில் இலக்கை அடைய உள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனத்தை 140 கிமீ வேகத்தில் இயக்குவதால் ஒசூர் - சென்னை வரை கிரீன் காரிடார் ஏற்ப்படுத்தப்பட உள்ளது
பேட்டி : விஜயபாஸ்கர், செயல் இயக்குனர் காவிரி மருத்துவமனை ஓசூர்.
Hosur Reporter. E. V. Palaniyappan