ஒசூரில் கவி கனகதாசரின் 535வது பிறந்தநாளையொட்டி கனகதாசரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
ஒசூரில் கவி கனகதாசரின் 535வது பிறந்தநாளையொட்டி நடைப்பெற்ற ஊர்வலத்தில் 100க்கும் அதிகமானோர் பங்கேற்பு: கனகதாசரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
15ஆம் நூற்றாண்டைச் (1509 – 1609) சேர்ந்த வைணவ பக்தர் கவி கணகதாசர், இவரு இசைக் கலையில் சாதனை படைத்தவர். கர்நாடக இசைக் கலையில் சாதனை படைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவரகா பார்க்கப்படுகிறார் கன்னட பக்தி இலக்கியத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியவர்.
இவரைப் போற்றும் விதமாக கர்நாடகாவில் நவம்பர் 20 ஆம் தேதியை கனகதாசர் ஜெயந்தி நாளாக போற்றப்படுகிறது. இந்த நாளை மாநில விடுமுறை நாளாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் குரும்பர் சமூக மக்கள் சார்பில் கவி கனகதாசரின் 535 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாப்பண்ணா தலைமையில், இராயக்கோட்டை சாலையில் உள்ள பண்ட ஆஞ்சநேயா கோவிலில் பூஜையுடன் கனகதாசரின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஒசூரின் முக்கிய வீதிகள் வழியாக 100க்கும் மேற்ப்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர், தாசரபேட்டையில் ஊர்வலம் நிறைவு செய்து கவி கனகதாசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு திமுகவின் ஒசூர் பகுதி செயலாளர் KTR என்கிற திம்மராஜ் முன்னிலை வகித்தார்,
விழா ஏற்பாட்டாளர்கள் கிரண் ராஜு கணேஷ் முனி லிங்கராஜ், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிமான ka மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோனேரிப்பள்ளி கோபமா சக்கர்லப்பா, BS சிம்மசந்தரம் கிருஷ்ணன்,ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லட்சுமி நவீன் குமார் ,சிவராமன், ஓசூர் சேகர்,வழக்கறிஞர்கள் சின்னப்பிள்ளைப்பா, ராயல் சீமா,GMCசுரேஷ்,கிருஷ்ணகிரி மணி, ராஜேந்திரன், நாராயணப்பா,அதிமுக நிர்வாகிகள் மாதேஸ்வரன், சேகர் அம்பரீஷ் பிரசன்ன , பொதுமக்கள் குறும்ப குருமன்ஸ் சமுதாயத்தை சேர்ந்தவர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Hosur Reporter. E.V. Palaniyappan