அஞ்செட்டி அருகே ஓட்டுனர் வெட்டி கொலை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் முரளி (வயது 37) இவர். அண்ணாசாலையை
அடுத்து தொட்டல்லா ஆற்றை ஒட்டியுள்ள தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் தனது மகள் கார்த்திகா வயது 11) என்பவருடன் நின்றுகொண்டிந்தபோது
அடையாளம் தெரியாத கருப்பு ஜர்கின், கருப்பு பேன்ட் அணிந்திருந்த ஒரு மர்ம நபர் வீச்சருவாளுடன் வந்து முரளியை அரிவாளால் சாராமரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்த முரளியின் மகள் அளரியடித்து ஓடி தனது தாத்தா ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பதரி போய் சென்று பார்த்ததில் முரளி இறந்து கிடப்பதை பார்த்து ரங்கசாமி செய்வதறியாமல் உடனடியாக அஞ்செட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார், பிரேதத்தை கைபற்றி தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்க்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து, கொலையாளியை தேடி வருகின்றனர்.
B. S. Prakash. Thally Reporter