தனியார் பள்ளிகளுக்கு புதிய வாய்ப்புகள்....?! அதிரடி காட்டும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம்.....!
தனியார் பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இயக்குனரகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் என்று இருந்த பதவி மாற்றப்பட்டு தனியார் பள்ளிகள் இயக்குனர் என்கிற அந்தஸ்துடன் இதன் முதல் இயக்குனராக முனைவர் நாகராஜன் முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று மாவட்டம் தோறும் தனியார் பள்ளிகளை நிர்வகிப்பதற்காக மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் இன்று தனியாக நியமனம் செய்யப்பட்டு தனி அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டத்திலும் இவர்களுக்கான அறிமுக கூட்டங்கள் நடத்தப்பட்டு. நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் உடனடியாக முடிப்பதற்கான பணியில் முடிக்கி விடப்பட்டுள்ளன.
DTCP தொடர்பான அலைகள் ஓய்ந்த பின்பு, எப்போது *தொடர் அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு* நம்மிடையே இருந்து வருகிறது.
DTCP கடந்த மாதத்தில் போட்ட ஒரு உத்தரவு இதற்காக பணம் கட்டி காத்திருந்த பள்ளி நிர்வாகிகள் அனைவரையும் ஆட்டம் காண செய்துவிட்டது.
இதனால் நமது பள்ளிகளுக்கு டி டி சி பி அங்கீகாரம் கிடைக்குமா என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் டிடிசிபி அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கி உள்ளது.
தொடர்ந்து பள்ளி கல்வித்துறை கொண்டுவரும் மாற்றுங்கள் என்னவாக இருக்கின்றன என்கிற எதிர்பார்ப்பும் நம்மிடம் இருந்து வருகிறது.
1.) 30 வருட குத்தகை ஒப்பந்தத்தில் இருந்து Lease Period *15 years குறைப்பதற்கான வாய்ப்புகள்* அதிகம் உள்ளதாக தெரிகிறது.
2) மேலும் Renuwel of Recognition application online மூலமாக கொடுக்க வேண்டும் .
3) Change of management விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன
4) Tranfering the school building from one place to another place விதிமுறைகள் வழி செய்யப்பட்டுள்ளன
5) Merger of schools புதிய விதிமுறைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
6) New opening or opening permission மட்டும் நமது Director of private schools வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
7) *Renewal of Recognition for CBSE, Matric schools, Joint Director of ( DPS) Directorate of private schools* வழங்குவார்கள் என தெரிகிறது.
8) பள்ளிகளுக்கான புதுப்பித்தல் புதிய கட்டணம் மற்றும் புதிய பள்ளிகளுக்கு தொடங்க கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
இன்னும் பல்வேறு மாற்றங்களை புதிய விதிகளில் கொண்டு வர இருக்கிறது நமது பள்ளி கல்வித்துறை.
ஆயினும் 9.11. 2022 மற்றும் 10. 11.2022 ஆகிய நாட்களில் பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் கூட்டங்களில் இந்த புதிய அரசாணை குறித்த ஆலோசனைகள் DEO Private Schools க்கு வழங்கப்பட உள்ளது .
இன்னும் பல்வேறு சலுகைகளும், வசதிகளும், வாய்ப்புகளும் இனி உருவாகும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது அதுவரை காத்திருங்கள்.....