ஓசூரில் நடைபெற்ற தென்பிராந்திய அளவிலான மகளிர் கால்பந்து போட்டியில் நெய்வேலி ஜவகர் பள்ளி அணி வெற்றி.
ஓசூரில் எம் எம் எஸ் தனியார் பள்ளியில் தென்பிராந்திய அளவிலான சி பி எஸ் இ பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் கால்பந்து இறுதி போட்டியில், நெய்வேலியைச் சேர்ந்த ஜவகர் மேல்நிலைப்பள்ளி, தன்னை எதிர்த்து விளையாடிய ஈரோடு சி எஸ் அகாடமி பள்ளியை 3க்கு - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ட்ராபி கோப்பையை தட்டிச் சென்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மத கொண்ட பள்ளி மாதிரி மேல்நிலைப் பள்ளியில், சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் தென் பிராந்திய அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பங்கேற்ற மகளிர் கால்பந்து போட்டி நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து சிபிஎஸ்சி பள்ளிகளைச் சார்ந்த மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் 24 அணிகள் வந்திருந்து கலந்து கொண்டு விளையாடின.
இன்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் நெய்வேலியை சேர்ந்த ஜவகர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஈரோட்டை சேர்ந்த சி எஸ் அகாடமி பள்ளி அணிகள் மோதின. இதில் நெய்வேலி ஜவகர் மேல்நிலைப்பள்ளி, தன்னை எதிர்த்து விளையாடிய சிஎஸ் அகாடமி பள்ளியை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வென்று டிராபிக் கோப்பையை தட்டி சென்றது.
வெற்றி பெற்ற ஜவகர் மேல்நிலைப்பள்ளி அணிக்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் டிராபிக் ஆன கோப்பையையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் மேரு மில்லர், பள்ளியில் முதல்வர் பிரபு ஓசூர் மாநகராட்சி துணை மேயர் சி ஆனந்தய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.