ஜனவரி மாதத்தில் பள்ளிகளுக்கு 13 நாட்கள் விடுமுறையா....? மாணவர்களை குழப்பும் மீடியாக்கள்.....!
ஜனவரி மாதத்தில் பள்ளிகளுக்கு 13 நாட்கள் விடுமுறையா....? மாணவர்களை  குழப்பும்   மீடியாக்கள்.....!


மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பதில் அரசு காட்டும் அக்கறையை காட்டிலும் சில ஊடகங்கள் அதிக பிரசங்கித்தனமாக செயல்பட்டு வருவது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது. 

 இவர்கள் வெளியிடும் செய்திகளில் நல்லா படிக்கும் மாணவர்கள் கூட மிக சீக்கிரத்தில் கெட்டுப் போய் விடுவார்கள்.... பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் இவர்களுக்கு என்ன அப்படி என்ன ஒரு சந்தோஷம்....?!

சமீபத்தில் ஒரு ஊடகத்தில் வந்த ஒரு செய்தியை பாருங்கள்....

பள்ளி மாணவர்களுக்கு தற்போது 2ம் பருவ தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதத்தின் பள்ளிகள் விடுமுறை குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு / 2ம் பருவ தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வுகள் முடிந்த பின்னர், டிசம்பர் 24ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கான 3ம் பருவம் தொடங்க உள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5, 2023ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2, 2023ம் தேதியும் தனியார் பள்ளிகளில் படிக்கும் எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் 2023 ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.
 

இந்நிலையில், 2023 ஜனவரி மாதம் பல பண்டிகைகள், சிறப்பு நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என்று அதிக விடுமுறை நாட்கள் வர உள்ளது. ஜனவரி மாதத்தில் மொத்தம் 5 ஞாயிற்று கிழமைகள், 4 சனிக்கிழமைகள் விடுமுறையும், அது போக பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என 3 நாட்கள் விடுமுறையும் வரவிருக்கின்றன. மேலும் ஜனவரி 26 குடியரசு தின விழா விடுமுறை என்று 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தம் 13 நாட்களும், ஜனவரி 2,3,4ம் தேதி ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் விடுமுறை காரணமாக 16 நாட்களும் அடுத்த மாதத்தில் விடுமுறை ஆக வர உள்ளது. இதனால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படி ஒரு செய்தியை வெளியிட்டால் மாணவர்கள் 'பசங்க' படத்தில் வருவதை போல் விடுமுறையைத்தான் எண்ணு வார்களே தவிர பள்ளிக்குப் போய் ஒழுங்காக படிக்க மாட்டார்கள்.

 இந்த விடுமுறை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓரளவுக்கு ஓகே வாகலாம். ஆனால் தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கும் இந்த விடுமுறைக்கும் சட்டம் சம்பந்தமே இல்லை.

எப்படி என்றால் ஐந்து ஞாயிற்றுக் கிழமையும் மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் ஆகிய நாட்களில் மட்டும் கண்டிப்பாக விடுமுறை இருக்கும். 

 மற்றபடி இரண்டாம் சனிக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் கண்டிப்பாக விடுமுறை இருக்காது. குடியரசு தினம் அன்று கண்டிப்பாக விடுமுறை விடமாட்டார்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடத்தி மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பார்கள். 

 ஆக மொத்தம் கூட்டி கழித்து பார்த்தால் ஜனவரி மாதத்தில் 7 , 8 நாட்களுக்கு மேல் அதிகமான விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை. எனவே யாரும் இந்த ஊடகங்களை நம்பி ஏமாறாதீர்கள்