மத்திய அரசு பள்ளியில் ரூ.2 லட்சம் ஊதியம்..13,404 காலிப்பணியிடம்..

மத்திய அரசு பள்ளியில் ரூ.2 லட்சம் ஊதியம்..13,404 காலிப்பணியிடம்.. 


மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா சங்கதன் பள்ளியில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை பெற முடியும்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கேந்திரியா வித்யாலயா சங்கதன் (Kendriya Vidyalaya Sangathan) செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பணிகள் காலியாக உள்ள இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

கேந்திரிய வித்யாலயா சங்கதனில் மொத்தம் 13,404 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி தொடக்க பள்ளி ஆசிரியர் 6,414, உதவி ஆணையர் 52, முதல்வர் 239, துணை முதல்வர் 203, முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) 1409, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) 3,176, நூலகர் 355, தொடக்க கல்வி ஆசிரியர் (மியூசிக்) 303, நிதி அலுவலர் 6, உதவி என்ஜினியர் (சிவில்) 2, உதவி செக்சன் அலுவலர் 156, இந்தி மொழிப்பெயர்ப்பாளர் 11, சீனியர் செயலக உதவியாளர் 322, ஜூனியர் செயலக உதவியாளர் 702, ஸ்டென்னோ கிராபர் கிரேடு - II 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மொத்தமுள்ள 13,404 பணிக்கும் தனித்தனி கல்வி தகுதிகள் உள்ளன. அதன்படி பிஎட், எம்எட், டிகிரி, பட்டமேற்படிப்பு உள்பட தொடர்புடைய படிப்புகளை மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தொடக்க பள்ளி ஆசிரியர், தொடக்கபள்ளி ஆசிரியர் பணி (மியூசிக்) 30 வயது, முதல்வர் பதவிக்கு குறைந்தபட்சம் 35 வயதும், அதிகபட்சம் 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். துணை முதல்வர் பதவிக்கு 45 வயது, முதுகலை பட்டதாரி ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் , நூலகர், நிதி அலுவர், உதவி என்ஜினியர் (சிவில்), உதவி செக்சன் அலுவலர், இந்தி மொழிப்பெயர்பாளர் பணிக்கு 35 வயது, சீனியர் செயலக உதவியாளர் பணிக்கு 30 வயது, Stenographer Grade II பணிக்கு 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.தொடக்கபள்ளி ஆசிரியர் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளமாக கிடைக்கும். உதவி ஆணையர், முதல்வர், பணிக்கு ரூ. 78, 800 முதல் ரூ.2.09 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். துணை முதல்வர் பதவிக்கு ரூ.56,100 முதல் ரூ.1.17 லட்சம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ.1.51 லட்சம், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. நூலகர், நிதி அலுவர், உதவி என்ஜினியர் (சிவில்)பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம், உதவி செக்சன் அலுவலர் பணிக்கு, ஸ்ட்டென்னோ கிரேடு II பணிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100ம் மாத சம்பளம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பத்தாரர்கள் டிசம்பர் 5ம் தேதி முதல் விண்ணப்பம் செய்ய முடியும்.

Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்