ஜனவரி 2ம் தேதி தனியார் பள்ளிகள் திறக்கப்படும் ; நந்தகுமார் தெளிவான விளக்கம்...!

ஜனவரி 2ம் தேதி தனியார் பள்ளிகள் திறக்கப்படும் ;  நந்தகுமார் தெளிவான விளக்கம்...!

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது  குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு  பெற்றோர்களையும், மாணவர்களையும்,  ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகிகளையும் குழப்பத்தில்    ஆழ்த்தி உள்ளது. 

இதனால் பள்ளிகள் இரண்டாம் தேதி திறக்குமா? இல்லை ஐந்தாம் தேதி தான் திறக்கப்படுமா? என்கிற அச்சம்   பலர் மத்தியில் நிலவுகின்றது. 

இவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்....

 அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது..

 தனியார் பள்ளியில் அனைத்தும் 02.01.2023 ஆம் தேதி திறக்க வேண்டும்.

 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் தான் 05.01.2023 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும்..

 தனியார் பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகளுக்கும் சம்பந்தமில்லை.

 தனியார் பள்ளிகளுக்காக தனி இயக்குனரகம் இயங்கி வருகிறது. அதன் இயக்குனர் முனைவர். ஆர்.நாகராஜ முருகன் அவர்கள் அறிவிக்கைப்படி நாம் அனைவரும் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும்..

 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி உள்ளதால் ஐந்தாம் தேதி திறக்கிறார்கள்.

 சிறப்பு வகுப்புகள் ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவது அந்தந்த பள்ளி நிர்வாகிகளின் விருப்பம்..

 தமிழ்நாடு முழுக்க அரசு பள்ளிகளே சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

 எனவே தனியார் பள்ளிகள் 10,11,12 ஆம் வகுப்புகள்  தங்கள் பாடங்களை முடிக்க அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பு வகுப்புகளைநடத்துங்கள்..

 மழை மாவட்டங்கள் சிறப்பு  வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கவும்..

 தனியார் பள்ளிகளுக்கு எதிராக சில அமைப்புகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு போர்க்கொடி தூக்கி  உள்ளனர்.

 அது குறித்தெ ல்லாம் கவலைப்பட வேண்டாம்..

 தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் மட்டும் தான் பொறுப்பு..

 சி இ ஓ அவர்களுக்கும் தனியார்  பள்ளிகளுக்கும் சம்மதம் இல்லை.

அரசு பொது த் தேர்வு நடத்துவது மட்டும்தான் சீ இ ஓ பொறுப்பு.

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

 .

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்