ரூ. 30 கோடி செலவில் ஓசூருக்கு புதிய பேருந்து நிலையம் அரசாணை வெளியீடு...!

 ரூ. 30 கோடி செலவில் ஓசூருக்கு புதிய பேருந்து நிலையம் அரசாணை வெளியீடு...!

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் 115 கோடி மதிப்பீட்டில் அமைக்க இருப்பதாகவும் அதற்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக பேருந்துகள் வாங்குவதும் நான்கு வழிச்சாலை திட்டத்தை 8 வழிச்சாலையாக மாற்றும் நடவடிக்கையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவகையில் ஊருக்குள் இருக்கும் பேருந்து நிலையங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தங்கள் தொகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை சட்டமன்ற் உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பியிருந்தனர். அப்போதே புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமதிப்பீடு வெளியிடப்படும் என கூறப்பட்டது.


இந்தநிலையில் தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க 115 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் படி திரூப்பூரில் ரூ.26 கோடி மற்றும் ஒசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்