தென் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்று ஓசூர் மாணவன் அசத்தல்.

 தென் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்று ஓசூர் மாணவன் அசத்தல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அத்வைத் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஹரிஷ் சென்னையில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டியில் 5000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தங்கம் என்ற மாணவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கௌரவப்படுத்தினார்.

கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான தென் மண்டல அளவிலான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதிகளில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளை சார்ந்த சுமார் 4000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 

இந்த நிலையில் 5000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் ஓசூர் அத்வைத் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியைச் சேர்ந்த பிளஸ் டூ வகுப்பு படிக்கும் மாணவன் ஹரீஷ் முதல் இடத்தை பெற்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 

இதை அடுத்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பின்னர் பள்ளியின் நிறுவனர் அஸ்வத் நாராயணன் பூங்கொத்து கொடுத்து கௌரவப்படுத்தினார். பின்னர் அவருக்கு டிராபி சாம்பியன்ஷிப் கோப்பையையும் தங்கப்பதக்கத்தையும் அணிவித்து சான்றிதழ்களையும் வழங்கி. பாராட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாக அலுவலர் பானு பிரகாஷ் முதல்வர் திருமதி சங்கீதா பல்லால் மாணவனின் தந்தை தனபால் தாயார் மணி உள்ளிட்ட ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்  பிற மாணவர்களும் இதுபோன்ற சாதனைகளை புரிய ஊக்குவிக்கும் விதமாக கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

தங்கம் வென்று சாதனை படைத்துள்ள மாணவன் ஹரிஷ் அடுத்த வாரம் புதுடில்லியில் நடைபெற உள்ள ஏழு நாடுகள் பங்கேற்கும் தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று கலந்து கொள்கிறார்.

இவ்வாறு சாதனை படைக்க முழு ஒத்துழைப்பு அளித்ததுடன் வெகுவாக உற்சாகப்படுத்திய பள்ளி நிர்வாகத்தினர் விளையாட்டு பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றியையும் இந்த பரிசையும் காணிக்கையாக்குவதாக மாணவன் தெரிவித்தார்.

Hosur Reporter. E. V. Palaniyappan 

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்