ராயக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்*
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே தான் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குகிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கழக துணை பொது செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி முனுசாமி கலந்துகொண்டு ஆற்றிய கண்டன உரையில் தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, பால் கட்டணம் உயர்வு, மின்கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் எரிவாய் சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் வழங்கப்படும் என்றும்தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு மக்களை ஏமாற்றிய திமுக அரசு என்றும்
ஏற்கனவே கவர்னரை சந்தித்து தி.மு.க. அரசு தவறுகளை சுட்டிகாட்டியுள்ளோம்.தி.மு.க. குடும்ப கட்சியாக செயல்படுகிறது இவரது மகன் நேற்று மந்திரியாக பதிவியேற்று உள்ளார் விலை வாசி பலமடங்கு உயர்ந்துள்ளது என்றும் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைபாடு ஆகும் என்று பேசினார்.
ஆர்பாட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் எம்.கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் விமலாசண்முகம், கெலமங்கலம் நகர செயலாளர் மஞ்சுநாத், பிதிரெட்டி கூட்டுறவு சங்க தலைவர் மாதேஷ், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, முன்னால் தலைவர் புருசப்பன், ஒன்றியஅவைத்தலைவர் மாரிமுத்து, துணைசெயலாளர் முனுசாமி,பொருளார் மகேஷ்குமார், பாசறை துணைத்தலைவர் சாந்தகுமார், வார்டு உறுப்பினர் சேகர்,ராஜா, செல்வம், ராஜன்ராவ் உட்பட ஏராளமன பேர்கள் கலந்துக்கொண்டார்கள்.
B. S. Prakash