இ. யூ. மு.லீக்கின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது!!
ராமநாதபுரம் மாவட்ட இ.யூ.மு.லீக்கின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் ஹாஜி ஏ.வரிசை முகமது தலைமையில் 17.12.2022 அன்று நடைபெற்றது.பொதுக்குழுவில் மாவட்ட தலைவராக ஹாஜி ஏ. வரிசை முகமது, மாவட்ட செயலாளராக ஏஎல். முகமது பைசல், மாவட்ட பொருளாளராக மௌலவி பெருநாழி முகமது யூனுஸ் ஆலிம் ஆகியோர்
மாவட்டப் பொறுப்பாளர்களாக இ.யூ.மு.லீக் மாநில தலைமை அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக குருவாடி கே.அன்சாரி,மாவட்டத் துணை அமைப்பாளராக ராமநாதபுரம் எஸ்.ஹதி யுத்துல்லா, முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட அமைப்பாளர் நம்புதாளை ராவுத்தர் நைனா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்டத் துணைச் செயலாளர்களாக ஆர். முகமது யாகூப் பனைக்குளம் ஏ. முகமது இக்பால் சாயல்குடி நத்தர்ஷா, ராமநாதபுரம் ஆசிப் உசேன், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளராக செய்யது இப்ராஹிம் ஆகியோர் பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் N.A .ஜெரினா பானு