அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிகள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கிருஷ்ணகிரி அவர்களின் ஆணையின்படி தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளும் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நொகனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய குழு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், திரு.கு. விமல்ரவிக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. குமரேசன்,நொகனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.மஞ்சுளா கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி செயலர் உடன் இருந்தனர்.