அரசு அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு வருவதில்லை ஒன்றிய குழு தலைவர் மன வேதனை!!

 அரசு அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு  வருவதில்லை ஒன்றிய குழு தலைவர் மன வேதனை!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஒன்றிய குழு சாதாரண கூட்டம் அதன் கூட்டரங்கில் தலைவர் கே. சண்முகப்பிரியா தலைமையிலும் BDO கூ. ரவி, துணைத்தலைவர் கண்ணகி முன்னிலையிலும் நடைபெற்றது.இதில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சனைகள் பற்றியும்,வளநாடு கவுன்சிலர் அர்ஜுனன் பேசும்போது,வளநாடு சமத்துவபுரத்திற்கு சாலை வசதியும் வரத்து கால்வாய்களை தூர்வாரி தரவும்மகாத்மா காந்தி 100 நாட்கள் வேலைகளுக்கு சம்பளம் தருவதில்லை சம்பளத்தை. உடனடியாக கொடுக்கவும், வரவு செலவு வாசிப்பதில்லை என பேசினார். BDOரவி, அடுத்த கூட்டத்தில் வரவுசெலவு வாசிக்கப்படும் என்று பேசினார்.இதற்கு பதில் அளித்து ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே. சண்முகப்பிரியா பேசும் போது, நானும் தற்போது தான் தலைவராக வந்துள்ளேன். படிப்படியாக கவுன்சிலரின் கோரிக்கைகள் செய்துதரப்படும்.இது சம்பந்தமாக கலெக்டரிடம், ஏசியுடனும் பேசியுள்ளேன் என்று அவர் கூறினார். மேலும் ஊராட்சி குழு கூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் வருவதில்லை எனவே அடுத்த கூட்டத்திற்கு அதிகாரிகள் அனைவரும் கூட்டத்திற்கு வருகை தர வேண்டும் என்று மனவேதனையுடன் அவர் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்