ஒரு முழம் கரும்பு கேட்டு இருக்க வேண்டிய சூழலில் தமிழக மக்கள்.... சீமான் கேள்வி ......

 ஒரு முழம் கரும்பு கேட்டு இருக்க வேண்டிய சூழலில் தமிழக மக்கள்....    சீமான் கேள்வி ......

இன்று ஒரு முழம் கரும்பு கேட்டு தமிழக மக்கள் இருக்க வேண்டிய சூழலில் நல்லாட்சியை வழங்குகிறோம் என்கிறார்கள் இதுதான் வளர்ச்சியா? - சீமான் கேள்வி 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளி,அயர்னப்பள்ளி,நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 5 வது சிப்காட் அமைக்க 3034 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்தும், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிட வலியுறுத்தி உத்தனப்பள்ளி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்

அப்போது வளர்ச்சி என்கிற பெயரில் அரசுகள் நிலம் வளம், காற்று, நீர் நாசமாக்கி வருகிறது

அணு உலை இல்லை என்றால் மின்சாரம் எங்கே என்கிறார்கள் பிற நாடுகள் வாகனங்களின் வேகத்தை வைத்தும் காற்றாலை வைத்தும் மின்சாரம் தயாரிக்கிறார்கள்..மாற்று இல்லை என்றால் தான் நாம் யோசிக்க வேண்டும் மாற்று உண்டு

கரும்பு வரழங்கினால் பண்டிகை என்கிற நிலையில் வளர்ச்சியை எப்படி செய்வீர்கள்.விளைநிலத்திற்கு பயன்படாத நிலத்தை எடுக்காமல் விவசாய நிலத்தை எடுப்பது ஏன்?

இந்தி, நீட்டை இதுவரை எதிர்ப்பது தமிழகம் தான், காரணம் தூய இரத்தம் ஓடுகிறவர்கள் தான் தமிழர்கள்

ஒசூர் பகுதிகளில் உள்ள 2 சிப்காட் மூலம் என்ற வளர்ச்சியை கண்டுள்ளோம்

 ஏற்கனவே வெங்காயம், பருப்பு வெளிநாடுகளில் வாங்குகிறோம் விளைநிலத்தை அழித்தால் தர்ச்சார்பு எப்படி அமையும்

கரும்பு விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு:

தமிழக அரசு கொள்முதல் செய்யும் என்கிற நம்பிக்கையில் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பினை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர், இதனை மக்களுக்கு கொடுக்கவில்லை என்றால் வீணாகதான் போகும்  சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கும் எதுவும் நம்மிடமில்லை

ஒரு முழம் கரும்பு வாங்க முடியாத நிலையில் இருக்கும் போது நாங்கள் நல்லாட்சி தான் வழங்குகிறோம் என்கிறார்கள் என விமர்சித்தார்

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்