பா.ஜ.க.வை பார்த்து காப்பி அடிக்கும் தி.மு.க. .....?!
தமிழகத்தில் BJP கால் ஊன்ற முடியாது என்று எந்த கட்சி சொல்கிறதோ இல்லையோ ஆனால் திமுக தினந்தோறும் கூறி வருகிறது. அவர்கள் தினந்தோறும் அப்படி சொல்ல சொல்ல அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
அதுவும் அண்ணாமலை இக்கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிறகு அசுர வேகத்தில் அதன் வளர்ச்சி இருக்கின்றது.
எதிர்க்கட்சியாக தமிழகத்தின் பலமான பெரிய கட்சியாக அதிமுக இருந்தாலும் அவர்களே திமுகவை கடுமையாக விமர்சிக்க யோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினந்தோறும் திமுகவை டார் டாராக கிழித்து தொங்க விட்டுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் தொடங்கி திமுகவின் கடை மட்ட தொண்டர் வரை ஒவ்வொருவரும் அன்றாடம் செய்து வருகின்ற பொய் பித்தலாட்டங்கள் ஏமாற்று வேலைகளை, ஊழல்களை தோல் உரித்து காட்டி வருகின்றார்.
இதனால் திமுக ஆட்சி மீது வெறுப்படைந்த பலரும் தாமாக முன்வந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் எந்த கட்சியிலும் இல்லாத அளவிற்கு அணித்தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பது இக்கட்சிக்கு மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.
மத்திய அமைச்சர் எல். முருகன் இக்கட்சியின் மாநில தலைவராக இருந்த போது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அணி தலைவர்களை உருவாக்கினார். பாஜகவில் இல்லாத அணிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து துறைகளுக்கும் அணிகள் உருவாக்கப்பட்டு மாவட்டம் ஒன்றியம் என்று தெரிந்தவர்களுக்கு எல்லாம் பதவிகளை தேடி தேடி கொடுத்தார்கள்.
அப்போது பாஜகவில் தலைவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் தொண்டர்கள் யாருமே இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது. அப்படி இருந்த போதும் அந்த தலைவர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒன்றாக சேர்த்து மாவட்டங்கள் தோறும் அணித்தலைவர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டது. அதுவே பெரிய மாநாடாகத்தான் காட்சியளித்தது.
இதனால் மாவட்டங்களில் ஒரு கொடி கட்ட கூட ஆளில்லாத நிலை மாற்றப்பட்டு மாவட்டம் தோறும் ஆயிரக்கணக்கான கொடிகளை கட்டிக் கொண்டு பாஜகவினர் வளம் வருவது இக்கட்சிக்கு மிகப்பெரிய வளர்ச்சி தான். அந்த அணித்தலைவர்கள் எல்லாம் இப்போது எல்லா பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான புதிய தொண்டர்களை உருவாக்கி விட்டார்கள்.
இது இப்போது திமுகவின் கண்களை அதிகமாகவே ஆழமாகவே உறுத்த தொடங்கியுள்ளது. அதனால்தான் இப்போது புதிய அணி தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகின்றது.
இதனால் வரை திமுகவில் மாணவரணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, என ஒரு சில அணிகள் மட்டுமே இருந்தது. அதில் கூட தலைவர்களின் வாரிசுகள் பொறுப்பேற்று இருக்கின்ற அணிகள் மட்டுமே பிரசித்தி பெற்று இருந்தன. மற்ற அணிகள் பெயருக்கு பதவிக்கு மட்டுமே செயல்பட்டு வந்தது.
இப்போது பா.ஜ.க.வில் அணிகள் மூலம் ஏற்பட்டுள்ள புரட்சியாளர் அபரிமிதமான கட்சி வளர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியை பார்த்து காப்பி அடிக்க தொடங்கியுள்ளது.
இதன் முதல் கட்ட முயற்சியாக கட்சியில் உள்ள அனைவருக்கும் அணித் தலைவர் பதவிகள் வழங்குவதற்கு ஆங்காங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
விரைவில் இதற்கான நியமனங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் முதலே கட்சியின் தலைவரும் இளைஞர் அணி தலைவரும் இவர்களை சந்திப்பதாக இருந்தது. இந்த நியமனத்தில் நிறைய குளறுபடிகள் இருந்ததால் அது சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கான மாநாடுகள் மாவட்டம் தோறும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. M.P. எலக்சன் வந்துடுச்சு இல்ல....?! அதனால் தான் இந்த அதிரடி திட்டமாம்....!