மாநில அளவில் கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற ஓசூர் அத்வைப் பள்ளி
*சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையே மாநில அளவில் கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற ஓசூர் அத்வைப் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு பள்ளியின் சார்பில் உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு*
சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி மவுண்ட் லிட்ரா சிபிஎஸ்சி தனியார் பள்ளியில், மாநிலங்களுக்கிடையே சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. நாக்-அவுட் முறையில் ஆண்கள் ,பெண்கள் என இரு பிரிவுகளாக நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிபிஎஸ்சி பள்ளிகளைச் சேர்ந்த 1600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நேற்று கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் ஆண்கள் ,மற்றும் பெண்கள் என இரு பாலரும் கலந்து கொண்ட இந்த போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அத்வைத் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளி முதலிடம் பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து இன்று ஓசூர் பள்ளியின் நிர்வாகத்தினர் சார்பில் வெற்றி பெற்ற கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் அஸ்வத் நாராயணன் மற்றும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி சங்க செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.
Hosur Reporter. E. V. Palaniyappan