ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி U19 ஐ சேர்ந்த கைப்பந்து அணியினர் மாவட்ட அளவில் போட்டியில் வெற்றி

 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி U19 ஐ  சேர்ந்த கைப்பந்து அணியினர்  மாவட்ட அளவில்  போட்டியில் வெற்றி 

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி U19 ஐ  சேர்ந்த கைப்பந்து அணியினர்  மாவட்ட அளவில்  போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளனர்!!!

டிசம்பர் 8ம் தேதி (நாளை) நாமக்கல் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில்  நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர்.

அந்த வீரர்களுக்கான (VOLLEYBALL KIT) studentsdotcom  நிறுவனம் சார்பாக நிறுவனர் சாலிஹ் ரஹ்மான் மற்றும் அம்ஜத்  உசேன் ஆகியோர்  வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில், Studentsdotcom ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும்,ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ்  மாணவர்கள் நாமக்கல் செல்வதற்கான போக்குவரத்து செலவு  30,000 ரூபாய் வழங்கினார் .

தொடர்ந்து (07-12-22) அன்று  மாநில போட்டியில் விளையாடநாமக்கல் செல்வதற்கு  தயாரான வீரர்களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் மற்றும் studentsdotcom நிறுவனர் சாலிஹ் ரஹ்மான்,பள்ளி தலைமை ஆசிரியை சாந்த குமாரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து  கொண்டு வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.    

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்