மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் இதை ஒரு நிமிடம் படியுங்கள்.....! மாறினால் நீங்கள் மனிதர்கள்.,. இல்லாவிட்டால்....?

 மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் இதை ஒரு நிமிடம் படியுங்கள்.....! மாறினால் நீங்கள் மனிதர்கள்.. இல்லாவிட்டால்....?

என்னை மண்டையில் சுத்தியை கொண்டு அடித்தார்கள் 

ஒரு மலை என் தலையில் மோதியதை போல் உணர்ந்து அம்மா அம்மா என்று கதறியே தரையில் சரிந்தேன். 

என் மண்டை எழும்பு உடைந்த வலியை உணர்ந்தேன் நான்..

கூர்மையான கத்தியை கொண்டு என் கழுத்தை அறுக்கும் பொது அந்த வலிநிறைந்த நொடி பொழுதில் என்னை வளர்த்த உன் முகமே என் நினைவில் வந்து சென்றது.

உயிர் பிரியும் தருவாயில் என்னை உருவாக்கிய நீயே என்னை அழிப்பாயென்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.!

இதுவே நான் ஒரு நாயாக பிறந்திருந்தால் கடைசி வரையும் வளர்த்தவர் வீட்டிலேயே இருந்து இறந்து போயிருப்பேன்..

ஏதோ மாடாக பிறந்துவிட்டேன் உன்னால் முடிந்தவரை என்னிலிருந்து பாலை கறந்து என்னை பயன்படுத்தி கொண்டு நான் உன்னிடம் காட்டிய அன்பையும் மறந்து பணத்துக்காக  என்னை மற்றவருக்கு உணவாக்கி விட்டாய்!

இத்தருணம் கடவுளிடம் நான் கேட்க்கும் ஒரு கேள்வி? 

நான் காட்டிய அன்பு பொய்யா?

இல்லை என்னை வளர்த்தவர் காட்டிய அன்பு பொய்யா?

மாடாக உழைத்த உழைப்புக்கு ஓய்வு கிடையாதா.?

மரணதண்டனை தான் ஓய்வா? 

உன் படைப்பில் வந்த என் குழந்தைக்கும் இதே நிலைதானா கடவுளே.?

நான் இதையெல்லாம் கேட்க கூடாது என்றென்னவோ என்னை வாயில்லா ஜீவனாய் படைத்தாயா?

நீ ஒருமுறையேனும் மாடாக பிறந்து இந்த சுயநலமிக்க மனிதர்களின் துரோகத்தை அனுபவித்து பார் என் வலி புரியும் உனக்கு..?

உன் சனாதன தர்மத்தில் என்னை 

உணவு பொருளாக காட்டாத நீ 

இந்த கலியுகத்தில் ஏன் என்னை 

தெருமுனை தின்பண்டமாக மாற்றிவிட்டாய் கடவுளே.

மனிதர்களை போல உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவோம். 

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்