தனியார் பள்ளி வாகனங்கள் ரிவர்ஸ் கேமரா, சென்சார் இல்லாமல் F.C. செய்யலாம்.....!!

 தனியார் பள்ளி வாகனங்கள் ரிவர்ஸ் கேமரா, சென்சார் இல்லாமல் F.C. செய்யலாம்.....!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கட்டாயம் ரிவர்ஸ் கேமரா, ரிவர்ஸ் சென்சார் ஆகியவற்றை பொருத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை ஆணையிட்டு இருந்தது. 

 உடனடியாக இதை அமல்படுத்தவும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதை நந்தகுமார் தலைமையிலான தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வன்மையாக கண்டித்ததோடு இதை பொருத்துவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் அதுவரை தனியார் பள்ளி வாகனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று அனைத்து மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் மனு வழங்கப்பட்டது. தமிழக போக்குவரத்து ஆணையாளரிடமும் முறையான மனு வழங்கப்பட்டது. 

 அதனால் மிக தீவிரமாக இருந்த இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. எல்லா வாகனங்களுக்கும் இப்போது பொருத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனாலும் எப்.சி.க்கு வருகின்ற வாகனங்கள் கண்டிப்பாக ரிவர்ஸ் கேமரா ரிவர்ஸ் சென்சார் இருந்தால் மட்டும்தான் எப்சி செய்ய வேண்டும் என்கிற நிலை இருந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு வாகனங்களுக்கு எப்சி வழங்கப்பட்டு வந்தது. 

 இதனால் இந்த கருவியை பொருத்துவதற்கு ஒவ்வொரு பள்ளி வாகனத்திற்கும் 15 ஆயிரம் வரை செலவாகிக் கொண்டிருந்தது. இதை தடுக்கும் விதமாக நந்தகுமார் தலைமையிலான தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இந்த  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்

தனியார் பள் ளி வாகனங்களுக்கு ரிவர்ஸ் கேமரா வைப்பதற்கு இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது.W. P. No. 32725 of 2022. இந்த உத்தரவை அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக   அனுப்பியதன் விளைவாக பல்வேறு மாவட்டங்களில் பல வாகனங்கள் F.C. செய்யப்பட்டு வருகிறது.  

முதற்கட்டமாக  இந்த வாரம் புதன்கிழமை  தர்மபுரியில் நடைபெற்ற எஃப். சி. தணிக்கையில்  கலந்துகொண்ட வட்டார போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் ஆர்.டி.ஓ.க்கள்  பல வாகனங்களுக்கு ரிவர்ஸ் கேமரா, ரிவர்ஸ் சென்சார் இல்லாமல் F.C. வழங்கி உள்ளார்கள்.

 இதனால் ஒவ்வொரு வாகனத்திற்கும் பல ஆயிரங்கள் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது. இது நமது சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். எனவே இதனை பயன்படுத்தி எப்.சி. செய்யாத வாகனங்களை உடனடியாக செய்து கொள்ள  வேண்டுகின்றோம்.

இந்த தடையானைக்கு இன்னும் இரண்டு கால மாதம் மட்டுமே அவகாசம் உள்ளதால் அதற்குள் விரைந்து உங்கள் பள்ளி வாகனங்களை F C  செய்து உங்களின் பணத்தை மிச்சப்படுத்துங்கள். இதற்கு நிரந்தர தடையாணை பெறவும் நமது சங்கத்தின் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 அது மட்டுமல்ல 365 நாட்களும் 24 மணி நேரமும் ஓயாமல் இயங்கும் அனைத்து வகையான கனராக வாகனங்களும் போக்குவரத்து ஆய்வாளரால் ஆய்வு செய்யப்பட்டு ஒரே இடத்தில் எப்.சி. வழங்குவது போன்று பள்ளி வாகனங்களுக்கும் ஒரே இடத்தில் ஒரே நாளில் எப்.சி. வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து ஆணையாளரிடமும் வைத்துள்ளோம். அதற்கும் உரிய தீர்வு கிடைக்கும்.என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் K.R. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்