திருவண்ணாமலை நகராட்சியின் அராஜகத்தைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
சொத்து வரி கட்டுவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும்150 % சொத்து வரியை உயர்த்தி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகளிடம் மிரட்டி சொத்து வரி வசூலித்தல், கால அவகாசம் கொடுக்காமல் பள்ளியை மூடுவது,சீல் வைப்பது பள்ளி நிர்வாகிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற அராஜகத்தை கண்டித்து.....
வரும்14.02.2023 செவ்வாய்க்கிழமை காலை சரியாக 10:30 மணியளவில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை நகராட்சியை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் தலைமையில் நடைபெறும்.
அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் பள்ளிகளின் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள நமது கோரிக்கைகளில் வென்றிட தவறாமல் வரவேண்டும்
உங்கள் உரிமைகளுக்காக போராட நான் வந்து கொண்டுள்ளேன்..
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அருகில் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் தவறாமல் தகவல் தந்து அழைத்து வர வேண்டும்.
ஆயிரம் பேருக்கு குறையாமல் ஆர்ப்பரிக்க வாருங்கள்..என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அறைகூவல் விடுத்துள்ளார் .