தென்னிந்திய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வேலு மனோகரன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இன்று தென்னிந்திய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிதுவக்கி வைக்கப்பட்டது. இப்போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்கிஷ் துவக்கி வைத்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் வீராங்கனைகளுக்கும் டி-ஷர்ட் வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு மாநில ஹாக்கி சங்கதலைவர் சேகர் மனோகர் முன்னிலை வகித்தார், மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் செல்லதுரை அப்துல்லா, அனைவரையும் வரவேற்றார் இது சம்பந்தமாக தமிழ்நாடு மாநில ஹாக்கி சங்கர் தலைவர் சேகர் மனோகர் நமது நிருபரிடம் கூறுகையில்:-
இன்றைக்கு ராமநாதபுரத்தில் சிறப்பாக தென்னிந்திய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி துவக்கி வைக்கப்பட்டது.ஒரே நாளில் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் செல்லதுரை அப்துல்லாவும், ஹாக்கி மைதானத்தை உருவாக்கிய வேலு மனோகரன் ஆகியோர் புதுப்பித்து தந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த போட்டியில் ஆறு மாநிலங்கள் கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டு போட்டியில் விளையாடுகின்றனர்ராமநாதபுரத்திற்கு இன்டர்நேஷனல் மேட்ச் வந்தால் நிறைய விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம், மேலும் இதன் நோக்கம் விளையாட்டு வீரர்களுக்கு விலைமதிப்பற்ற விளையாட்டு பொருட்கள் கொடுத்து உலக தரத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவது தான் இதன் நோக்கம். FlHG புரோடிங் லீக் விளையாட்டு மேன் ஆப் த மேச் பட்டத்தை வாங்கிய தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திக் இங்கு வருகை தந்துள்ளார்.19 வயது உள்ள ஆண் பெண்கள் கலந்து கொண்டு விளையாடு கிறார்கள்.இதில் முனீஸ், ரியாஸ் போன்ற வீரர்கள் வந்து கலந்துள்ளார்கள்.தற்பொழுது ஹாக்கி போட்டியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இதில் கார்த்திக் வென்று உள்ளார். என்று மாநில ஹாக்கி சங்க தலைவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி