ஜிஎஸ்டி கணக்கு முடக்கப்படுவதை தவிர்க்க குறித்த காலத்தில் வரி செலுத்த வேண்டும்.-
ஜிஎஸ்டி கணக்கு முடக்கப்படுவதை தவிர்க்க சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்த காலத்தில் வரி செலுத்த வேண்டும்.- ஓசூரில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் ஆணையர் வலியுறுத்தல்.*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சேலம் மத்திய சேவை மற்றும் சரக்கு வரித்துறை ஆணையகம் மற்றும் ஓசூர் சிறு குறு தொழிற்சாலைகள் சங்கம் இணைந்து, 2023-24ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் புதிதாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை சேலம் மத்திய சேவை மற்றும் சரக்கு வரித்துறை ஆணையர் திருமதி சுதா கோக்கா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மத்திய அரசின் புதிய நிதிநிலை அறிக்கையில் வர்த்தகம் மற்றும் தொழிற் சாலைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட பரிந்துரைகளை விளக்கும் விதமாகவும் நடைபெற்ற இந்த கருத்தரங்கில்,
சேலம் மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் இணை ஆணையர் ராஜேஷ் செல்கே, துணை ஆணையர் திருமதி ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டு சிறு குறு தொழில் முனைவோர் களுக்கான சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பேசினர்.
இதில் ஓசூர் சிறு குழு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் திருமதி சுதா கோக்கா,
வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாதந்தோறும் இது போன்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மத்திய நிதிநிலை அறிக்கையில் வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இது போன்ற கருத்தரங்குகள் நடத்துவதன் வாயிலாக வர்த்தக மற்றும் தொழில் முனைவோர்களுடன் நெருக்கமாக பழகுவதுடன் ஜிஎஸ்டி நடைமுறைகளை பின்பற்றுவதில் உதவி செய்வதை இதன் நோக்கமாகும்.
சிறு குறு தொழில் நிறுவனங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதன் காரணமாகவே அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே காலதாமதத்தை தவிர்த்து குறித்த நேரத்தில் வரி செலுத்தினால் அவர்களுக்கு தொழில் செய்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதேபோல வரி விதிப்பில் உள்ள நடைமுறைகளை சரியாக புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும். ஜிஎஸ்டி எண்கள் முடக்கப்படுவதை தவிர்க்க குறித்த காலத்தில் வட்டியுடன் கூடிய வரியை செலுத்த வேண்டும். அதற்கான காலத்தவணைகள் எதுவும் வழங்கப்படாது. எனவே வரி செலுத்துவதில் முறையான புரிதலுடன் காலதாமதத்தை தவிர்த்து உரிய நேரத்தில் ஜிஎஸ்டி வரிகளை செலுத்துவதன் வாயிலாக தொழிற்சாலைகளில் முன்னேற்றத்திற்கு இந்த துறை எப்பொழுதும் துணை நிற்கும்... என அவர் தெரிவித்தார்.
பேட்டி : திருமதி சுதா கோக்கா, ஆணையர் சேலம் மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம்