வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு சாதனை படைத்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி : மருத்துவ குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

 வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு சாதனை படைத்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி : மருத்துவ குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி 1208 கர்ப்பிணி பெண்களுக்கு மாபெரும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் நடத்தினர்.

உலக அளவில் ஒரே இடத்தில் அதிகளவு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது இதுவே முதல்முறை என்பதால்  இந்த சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதனை அங்கீகரித்த லண்டனை தலைமை இடமாக கொண்ட வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத்தினர்.

அதற்கான சான்றிதழை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் அவரது மருத்துவ குழுவினரிடம் வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து மருத்துவ குழவினர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் சுகாதார துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அனைவரையும் பாராட்டினார்.

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்