முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வை நடத்தப் பள்ளிக் கல்வித் துறை முடிவு....!
வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வை நடத்தப் பள்ளிக் கல்வித் துறை முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 24 ஆம் தேதி தொடங்கி மாத இறுதிவரை ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்தது. இந்நிலையில், வெயிலின் காரணமாக தற்போது தேர்வுகளை வரும் 11ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தேதியில் தேர்வுகளைத் தொடங்கி, ஒரே வாரத்திற்குள் நிறைவடையும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதன்படி, திருவள்ளூரில் 11ஆம் தேதி தொடங்கி, 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும், சென்னையில் வரும் 18ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாடம் தேதி
தமிழ் ஏப்.21
ஆங்கிலம் ஏப்.24
கணிதம் ஏப்.25
அறிவியல் ஏப்.26
சமூக அறிவியல் ஏப்.28
விளையாட்டுக் கல்வி ஏப்.27
தேர்வு நேரம்: தேர்வு நடைபெறும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வ் தேதிகளில் மாற்றம் இருந்தாலும் தேர்வு நேரம் ஏதும் மாறுபடவில்லை. 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். 7-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 8-ம் வகுப்பிற்கு காலை 9.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், 9-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.