RTE மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு 20ம் தேதி துவங்குகிறது.

 RTE மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு  20ம் தேதி துவங்குகிறது..


இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ், குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆன்லைன் பதிவு வரும் 20ம் தேதி துவங்குகிறது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்.கே.ஜி. வகுப்பில் இருக்கக்கூடிய மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

இந்த திட்டத்தில் எல்கேஜி   வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால் பள்ளிச் சீருடை, பாட புத்தகம், நோட்டு புத்தகம், Bus Fees ஆகியவற்றை கட்டாயம் செலுத்த வேண்டும்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு வரும் 20ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 1.50 லட்சம் இடங்கள் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன. 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆன்லைன் வழியில் பதிவு செய்யும் வழிமுறை உள்ளிட்ட முழுமையான அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் உங்களுக்கு தேவையான விவரங்களை உங்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். 

 நீங்களாக பிரவுசிங் சென்டரில் சென்று விண்ணப்பிப்பதை விட உங்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் விசாரித்து விண்ணப்பம் செய்வதன் மூலமே உங்கள் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் இட ஒதுக்கீடு பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அருகில் உள்ள பள்ளியை விட்டுவிட்டு வேறு பள்ளிக்கு விண்ணப்பித்தால் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே உடனே உங்கள் அருகாமையில் உள்ள பள்ளியை நாடுங்கள்.



Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்