RTE Admission 2023: தனியார் பள்ளிகளில் 20.04.23 முதல் விண்ணப்பிக்கலாம்..!

 RTE Admission 2023: தனியார் பள்ளிகளில்  20.04.23 முதல் விண்ணப்பிக்கலாம்..!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இலவசக் கல்வி திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளியில் 23.05.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.


எல்கேஜி முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிலும், 1ஆம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பிலும் இந்த சேர்க்கை நடைபெறும். இதற்கான இணையதள முகவரி rte.tnschools.gov.in ஆகும்.

18.05.2023 வரை பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விபரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்மந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் 21.05.2023 அன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படும்.

எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2019 முதல் 31.07.2020- க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2017 முதல் 31.07.2018க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ்; வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்; வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்; நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்; இருப்பிடச் சான்று ஆகிய சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்மந்தப்பட்ட பள்ளியில் 23.05.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24.05.2023 அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் 29.05.2023க்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும்.Aன்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.