மாபெரும் கிராமிய கபாடி திருவிழா!!!
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அருகில் உள்ள பால்க்கரை கிராமத்தில் அலெக்ஸ்-ன் 11-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலெக்ஸ்-ன் வெள்ளி நிலா மற்றும் ஸ்ரீ காந்தாரி அம்மன் கபடி கழகம் மற்றும் பால்க்கரை கிராம பொதுமக்கள் மற்றும். மகளிர் மன்றம் இணைந்து மாபெரும் கிராமிய கபடி போட்டி 14/05/23 அன்று நடைபெற்றது. இந்த போட்டி பால்க்கரை கிராம பொதுமக்கள் தலைமையில் நடைபெற்றது.ராமநாதபுரம் B1 காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலை வகித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளான அலெக்ஸி -ன் வெள்ளி நிலா பால்கரை அணி முதலாம் பரிசான ரூபாய் 50001ம், இரண்டாம் பரிசாக ஆய்க்குடி தேசிய பறவை அணி ரூபாய் 40001ம், மூன்றாம் பரிசான சாமிபட்டி லவ் பேர்ட்ஸ் அணி ரூபாய் 30001ம், பெற்றுக்கொண்டனர்.மொத்தம் 90 அணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த கபடி போட்டி மிக அருமையாக சிறப்பாக அமைதியாக நடைபெற்று முடிந்தது. இதில் ராமநாதபுரம் ஒன்றிய சேர்மன் கே.டி. பிரபாகரன், ஆர்.எஸ். மடை பி.விஜயகுமார், ஒபிஎஸ் அணி ஒன்றிய கழக செயலாளர் எம். முத்து முருகன், அமமுக ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி முத்தீஸ்வரன், பொறியாளர் சிங்கப்பூர் டி.சிவசாமி, விசிக நகர பொருளாளர் பாலமுருகன், தங்க நகை தயாரிப்பாளர் எம்.சிவக்குமார், ராஜீவ் காந்தி பால்க்கரை, கேங்குராஜ், நவநீதன், முனியப்பா,தினேஷ், வைசவா, கூரி, ரவி,பத்மநாதன், அஜித்குமார், சிவக்குமார்,இளங்கோ உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்து பொதுமக்கள், பால்க்கரை கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி