தெற்கு புதுகுடியிருப்பு கிராமத்தில் புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது!!!

 தெற்கு புதுகுடியிருப்பு கிராமத்தில் புதிய நியாயவிலை கடை  கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது!!!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணம் ஊராட்சி தெற்கு புதுகுடியிருப்பு குக்கிராமத்தில் தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக நியாயவிலை கடை செயல்பட்டு வருகிறது, அப்பகுதி பொதுமக்கள் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்  காதர்பாட்சா முத்துராமலிங்கம்  நியாயவிலை கடை கட்டிடம் கட்டிதர வேண்டி மனு அளித்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று கட்டிடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ருபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்து பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 13/05/23 அன்று தெற்கு புதுகுடியிருப்பு பகுதியில் ஊர்பொதுமக்கள் தானமாக வழங்கப்பட்ட இடத்தில் 13/05/23 அன்று புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை  திருப்புல்லாணி கிழக்கு  ஒன்றிய செயலாளர் நாகேஷ்வரன்  தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக துணை செயலாளர்ரும் திருப்புல்லாணி கிழக்கு பகுதி மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், பெரியபட்டினம் ஒன்றிய கவுன்சிலர் செ.பைரோஸ் கான், பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர்ஜான் பீவி திமுக கிளை செயலாளர்ரும் மீனவர் கூட்டுறவு சங்க தலைவரும்மான அன்சார் அலி, ஒன்றிய துணை செயலாளர் பஷீர் முகம்மது, முன்னால் ஒன்றிய கவுன்சிலர் முகம்மது அபிபுல்லா, ஊர் தலைவர் பாலு, அப்பகுதி ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகலெட்சுமி, கிருஷ்ணாபுரம் திமுக கிளை செயலாளர் கருப்பையா, முத்து கிருஷ்ணன் வண்ணாங்குண்டு கிளை செயலாளர் நஜிபுதீன், சிட்டாங்காடு கிளை செயலாளர் கருப்பையா, நியாயவிலை கடை பொறுப்பாளர் முருகேசன்  மற்றும் ஊர் பொதுமக்கள் மகளிரணியினர் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது எங்கள் கோரிக்கையை ஏற்று நியாய விலை கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கதிற்கு நன்றி கூறினார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்