தமிழ்நாடு அரசு வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களில் 'ஜி'பயன்படுத்த தடை....?!

 தமிழ்நாடு அரசு வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களில் 'ஜி'பயன்படுத்த தடை....?!

அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்புச் சான்று விலக்கு உள்ளது. உரிய வரி விலக்கு மற்றும் காப்புச் சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே "ஜி" அல்லது "அ" என்ற எழுத்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களைத் தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் 'ஜி' அல்லது 'அ' என்ற எழுத்துகளைப் பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.


விதிமீறல் வாகனங்கள்: இதைத்தவிர, நேரடியாக களத்தில் நின்றும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையிலும், ஏ.என். ஆர்.பி. வகை கேமராக்கள் மூலமாகவும் விதிமீறல் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.. இதுதவிர, நிலுவை அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடியும், போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து சுமார் ரூ.12 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது... இந்த புகாரையடுத்து, விதிமீறும் அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து அரசு வாகனங்களுக்கும் தற்போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். அதன்படி, ஐபிஎஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

அரசு வாகன பதிவெண் பலகை: அரசு வாகன பதிவெண் பலகையில் (நம்பர் பிளேட் அரசு வாகனம் என்று குறிக்கும் வகையில் 'அ' என தமிழிலும், 'ஜி' என ஆங்கிலத்திலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். இது விதிமீறல் என சுட்டிக்காட்டி பொதுமக்கள் பலர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் போட்டோவுடன் புகார் தெரிவித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு இப்போது ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

வருகின்றனர்.. இதுதவிர, நிலுவை அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடியும், போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து சுமார் ரூ.12 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது... இந்த புகாரையடுத்து, விதிமீறும் அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து அரசு வாகனங்களுக்கும் தற்போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். அதன்படி, ஐபிஎஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்