கட்டப்பஞ்சாயத்துக்கு போக சொல்லும் கலெக்டர் ஆபீஸ்....!?
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தினை அளவிடு செய்து கொடுக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக அவைக் கழித்து வருவதாக கூறி மதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் புகார் மனுவினைக் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் அருகே உள்ள காத்தாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மார்டினா பால்ராஜ் இவரது பூர்விகநிலத்தினை முறைகேடாக பக்கத்து நிலத்துக்காரர் அபகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான காவல் நிலையத்தில்
வழக்கு தொடரப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாணையின்
போது மார்டினா என்பவருக்கு சொந்தமான நிலத்தினை உரிய அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது தொடர்பாக சம்மந்தபட்ட அலுவலர்களையும் அனுகியும் இதுவரை அந்த நிலத்தினை அளவிடு செய்து
கொடுக்காமல் அலைக்கழித்து வருவதாக செல்லப்படுகிறது.
இதனால் பாதிகக்கப்பட்ட
மார்டினா தனது குடும்பத்தினர்களுடன் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தினை அளவீடு செய்துக்
கொடுக்க வழியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
கோரிக்கை மனுவினை கொடுத்தார்.
அப்போது தங்களுக்கு சொந்தமான 30 செண்ட் நிலம் காத்தாம்பள்ளம் கிராமத்தில் உள்ளது.
இந்த நிலத்தினை பக்கத்து நிலத்துக்காரர் அபகரித்து சொந்தம் கொண்டாடி வருகிறார் ஆகையால் UDR -ல் உள்ளபடி எங்களது நிலத்தினை அளவீடு செய்து கொடுக்க வேண்டும், இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறோம் யாரும் கண்டுகொளவில்லை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தினை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் இதன் முன்னதாக இந்த நிலத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்டினா குறிப்பிட்டார்.