செய்தியாளர்களுக்கு இலவச தனியார் பேருந்து பஸ் பாஸ்
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட தலைவராக பாலமுருகன் , கௌர ஆலோசகராக மூத்த பத்திரிக்கையாளரும் , நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர். கே.எம்.சந்திரமோகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்தார் .மாநில தலைவர் சுபாஷ்
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தருமபுரி மாவட்ட சங்கத்தின் கூட்டம் மாநிலத் தலைவர் டி எஸ் ஆர் .சுபாஷ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட பஸ் உரிமையாளர் டி என் சி மணிவண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் பரணிதர் , செய்தி தொடர்பாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தர்மபுரி மாவட்ட அனைத்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தாலுகா வாரியாக செய்தியாளர்களுக்கு இலவச தனியார் பேருந்து பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள், சங்க பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட தலைவராக பாலமுருகன் . கௌரவ தலைவராக சரவணன், கௌரவ ஆலோசகராக மூத்த பத்திரிகையாளர், மற்றும் நுகர்வோர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர். கே.எம். சந்திரமோகன் , துணைத் தலைவராக மூர்த்தி , துணை செயலாளர் அம்முதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் கூட்டத்தில் அறிவித்தார்.
அப்போது மூத்த பத்திரிகையாளர்கள் சுப்பு , கஜேந்திரன், சசி, மாருதி மனோகர் , ஜெகன், சீனிவாசன், கணேசன், புதிய நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்தி பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை தருமபுரி மாவட்டம் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் , கிழக்கு மாவட்ட தலைவர் புகழேந்தி ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள்.
Moorthi. Reporter