ரூ.4.70 கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணிகள் மாநகர மேயர் திடீர் ஆய்வு
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 43 வார்டில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலும், 44 வது வார்டில் 2.20 கோடி ரூபாய் மதிப்பிலும் மண் சாலையை தார் சாலை ஆக்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் மொத்தம் நான்கு கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஓசூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்க உள்ளதால் அப்பணிகள் மேற்கொள்ளப்படாத இடங்களில் மட்டும் சாக்கடை கால்வாய் மழை நீர் வடிகால் மற்றும் போர்வெல் அமைத்து கொடுக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் 43 வது வார்டுக்கு உட்பட்ட தீபம் நகர், தின்னூர், காவிரி நகர், வி.ஐ.பி., நகர்,காமராஜ் காலனி மற்றும் 44 வது வார்டுக்கு உட்பட்ட அபிராமி கார்டன் கர்ணூர், பழைய மத்திகிரி, ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா,பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோருடன் சென்று மாநகர மேயர் சத்யா திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் தரம், அதன் உயரம், அகலம் குறித்து மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்தார். மேலும் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களிடம் கூறிய மாநகர மேயர் சத்யா பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டிருந்து அவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.
வி.ஐ.பி., நகரில் மாநகராட்சி பூங்காவை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் மஞ்சுளா முனிராஜ், புஷ்பா சர்வேஷ், K.G.பிரகாஷ், ரவிக்குமார், சுமன், சம்பத், தயாளன், சீனிவாசன், தினேஷ், குணா, ஷெரிப், மதுரகவி, நாகு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
E. V. Palaniyappan