தேன்கனிக்கோட்டை- அய்யூர் மெயின் ரோடு முதல் சிக்கேபுரம், ஏணிமுச்சந்திரம் வழியாக அத்திக்கோட்டை சாலை வரை ர சாலை அமைக்கும் பணி.
தளி சட்டமன்றத் தொகுதி சந்தனப்பள்ளி ஊராட்சியில் தேன்கனிக்கோட்டை- அய்யூர் மெயின் ரோடு முதல் சிக்கேபுரம், ஏணிமுச்சந்திரம் வழியாக அத்திக்கோட்டை சாலை வரை ரூ. 1 கோடி 94 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி.
தேன்கனிக்கோட்டை - அய்யூர் மெயின் ரோடு, தல்சூர் முதல் குருபட்டி கிராமம் வரை ரூ.22.30 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் இலகுமையா, மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
B.s. Prakash