வாக்குச்சாவடிகள் முகவர்களின் ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர தெற்கு பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகள் முகவர்களின் ஆய்வுக்கூட்டம் இன்று ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ADS மஹால் திருமண மண்டபத்தில் ஓசூர் மாநகரச் செயலாளர் மற்றும் மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயர் S.A.சத்யா Ex.mla தலைமையில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாநகர துணைச் செயலாளர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநகர அவை த்தலைவர் திரு. N.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் திரு.தா. சுகுமாரன் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் அ.யுவராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக மாநகர துணைச் செயலாளர் திரு.கி. ரவிக்குமார் நனறியுரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் திரு.N.S. சுமதேஸ்வரன் திரு. சென்னீரப்பா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இளைஞர் அணி சுமன், தொழிலாளர் அணி பிரகாஷ், பொறியாளர் அணி ஞானசேகரன், மாணவர் அணி ராஜா, ஆதிதிராவிடர் அணி முனிராஜ், மாவட்ட பிரதிநிதிகள்,மாநகர இளைஞர் அணி கலைச்செழியன், மற்றும் தெற்கு பகுதி நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், வாக்கு சாவடி முகவர்களும் கலந்து கொண்டனர்.
E. V. Palaniyappan