போதிய மழை இல்லாத காரணத்தினால் காய்ந்து கொண்டிருக்கிறது

 போதிய மழை இல்லாத காரணத்தினால் காய்ந்து கொண்டிருக்கிறது....

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆதனூர் கிளாப் பாளையம்  மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தற்போது ஆடி பட்டம் மானாவாரி கம்பு ,மணிலா, திணை, போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு போதிய மழை இல்லாத காரணத்தினால் காய்ந்து கொண்டிருக்கிறது எனவே தமிழக அரசு உடனடியாக பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் பாதிப்பு தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 5000 வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்........🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

ஒரு விவசாயி இந்த ஆடிப்பட்டத்தில் மானாவாரி பயிர் செய்தால் அதற்கு.....

1.உழவு ஒரு சால் 1500

2.உழவு இரண்டாவது சால் 1500

3.விதைக்கம்பு ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ 400

4.கம்பு விதைத்தல் 1500

5.தீனீ மூட்டை 1300

6.களை எடுத்தல் ஒரு ஏக்கருக்கு 10  ஆள் (130×10=1300) ........ 

ஆனால் பயிர்கள் முற்றிலும் காய்ந்து விட்டால் விவசாயிக்கு இதனால் ஒரு லாபமும் கிடைக்காது ஏற்கனவே விவசாயிகள் நஷ்டத்தில் கடன் வாங்கி பயிர் செய்து கொண்டிருக்கின்றர் இந்த நிலைமை நீடித்தால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் விவசாயமும் அழியும் நிலை நேரிடும் எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய பயிர் இழப்பீடு தொகையை வழங்கினால் மட்டுமே விவசாயிகளை பாதுகாக்க முடியும் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

இப்படிக்கு தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கம்  ஆ.கிளாப்பாளையம்

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்