பிடிஓக்களை கண்டித்து யூனின் சேர்மேன் மற்றும் கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்.....
ஓசூர் அடுத்து கெலமங்கலம்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியால் கூட்டத்தைவிட்டு வெளியேறிய பிடிஓக்களை கண்டித்து யூனின் சேர்மேன் மற்றும் கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்*
ஓசூர் அடுத்த கெலமங்கலம் வட்டார வளளர்ச்சி அலுவலகத்தில் நடந்த மன்ற கூட்டம் யூனியன் சேர்மேன் கேசவமூத்தி தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் BDO குமரேசன் மற்றும் ஸ்கீம் BDO சாந்தலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் 13 கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில், 8 மாதத்திற்கு பிறகு தற்போது தான் மன்றத்தின சாதரன கூட்டம் நடைபெற்றது.
இதுவரை எத்தனை திட்டங்கள் வந்துள்ளது. அதற்கான நிதி ஒதுக்கிடு எவ்வளவு என பிடிக்களிடம் கேள்வி எழுப்பினர் அப்போது பிடிஓ சாந்தலட்சுமி மொபைல் பேசிக்கொண்டிருந்தார். இதற்கு யூனியன் சேர்மேன் கவுன்சிலர்கள் கேள்விக்கு பதில் கூறாமல் மொபைல் பேசிக்கொண்டிருக்கின்றினர் என கேட்டதற்கு பதில் கூறாமல் கூட்டத்தைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது செய்தியாளர்கள் செய்திசேகரித்துகொண்டிருந்த போது. அங்கிருந்த மற்றோர் பிடிஓ குமரேசன் அதிகாரிகளை வீடியோ மற்றும் போட்டோ எடுப்பதாக அவரும் பதிலுக்கு கவுன்சிலர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் மைபைல் போனில் கவுன்சிலர்களையும் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களையும் வீடியோ எடுத்துக்கொண்டு அதிகாரிகள் திருடர்களானா என அவரும் பதில் கூறாமல் நைசாக கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.
இதனால் கூட்டம் நடைபெறாமல் பாதியில் முடிந்த நிலையில் அதிகாரிகள் வந்து பதில்கூறும் வரை கூட்ட அரங்கை விட்டு வெளியேராமல் கவுன்சிலர்கள் மற்றும் யூனியன் சேர்மேன் கேசவமூர்த்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்