*மதுரை அதிமுக மாநாடு : ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் அமைச்சர்*
அஇஅதிமுக சார்பில் மதுரையில் வருகின்ற 20 ஆம் தேதி பிரமாண்டமான மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் அதிமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை அதிமுக மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தமிழக முன்னாள் அமைச்சர், அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி, கட்சி தொண்டர்களோடு ஆட்டோக்களில் கட்சியின் ஸ்டிக்கர் மற்றும் பேனர்களை ஒட்டினார்.
அப்போது அவர் ஒரு ஆட்டோவில் ஏறி ஆட்டோவை ஓட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் ராஜு, அசோக ரெட்டி, மஞ்சு, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், அண்ணா தொழில் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஓசூர் மாமன்ற உறுப்பினர் சிவராமன்,ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னை கிருஷ்ணன் வட்டக் கழக செயலாளர்கள் கும்மி ஹேமா குமார், சிவக்குமார், சீனிவாஸ், ஹரி, பிரசாந்த், மற்றும் ஓசூர் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன கலர் கலந்து கொண்டனர்.,
E. V. Palaniyappan